உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுப்பு !

அமெரிக்க தமிழ் சங்கங்களின் பேரவை நடாத்துகின்ற மாநாட்டிலும், தமிழராய்சி மாநாட்டிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரைகள் இடம்பெற இருக்கின்றன.

CHICAGO, UNITED STATES OF AMERICA, July 5, 2019 /EINPresswire.com/ —

அமெரிக்காவின் சிகாகோவில் இடம்பெறுகின்ற உலகத் தமிழாராய்சி மாநாட்டில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுக்கின்றார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. யுலை 3ம் நாள் தொடங்கிய இம்மாநாடு 7ம் நாள் வரை இடம்பெறுகின்றது.

இம்மாநாட்டையொட்டி அமெரிக்க தமிழ் சங்கங்களின் பேரவை நடாத்துகின்ற மாநாட்டிலும், தமிழராய்சி மாநாட்டிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரைகள் இடம்பெற இருக்கின்றன.

மொறிசியஸ் நாட்டுப் பிரதமர் பிரவிந் யுக்னோ, ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார், தமிழ்நாட்டு மாநில அரசு தமிழ்துறை அமைச்சர் மப்பா பாண்டியராஜன் உட்பட பல உலகத் தமிழ் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கெடுக்க இருக்கின்றனர்.

http://www.naathamnews.com/fetna-meeting-2019/

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter


Source: EIN Presswire